#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
16 வயது சிறுமி கடத்தி பலாத்காரம்.. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை.!
திண்டுக்கல் அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சென்னநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்த வழக்கில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதி சரண் விசாரித்தார்.
அப்போது வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.அதில் குற்றவாளி சரவணகுமாருக்கு போக்கோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.