மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்... உடந்தையாக இருந்த தாய்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது தாய், தந்தை இருவரும் பிரிந்து வந்து வந்ததால் அவரது அத்தை வீட்டில் தங்கி பள்ளி படிப்பை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தில் வீட்டிற்கு வந்த சிறுமியின் தாய் புவனேஸ்வரி மகளை விடுமுறைக்கு தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சென்ற சிறுமியிடம் வீட்டிற்கு வந்த சக்திவேல் என்ற நபர் தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது அத்தையிடம் கூறியுள்ளார். உடனே அவர் ஜியபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் சிறுமி தாய் மற்றும் சக்திவேல் மீது போக்கோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள புவனேஸ்வரி மற்றும் சக்திவேலை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.