மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காட்டுக்குள் நிர்வாணமாக கிடந்த 25 வயது இளம் பெண்ணின் சடலம்..! சிக்கிய 17 வயது சிறுவன்.! வெளியான பலதிடுக்கிடும் உண்மைகள்.!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் நடேசன் - தீபா தம்பதியினர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் விவசாயம் செய்து வந்துள்ளனர். தீபா கணவருடன் சேர்ந்து விவசாய தொழிலுக்கு உதவியாகவும், ஆடு, மாடு மேய்த்தும் வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துணிகளை துவைத்து விட்டு, ஆடு மாடுகளை கீரைக்காடு காட்டுப்பகுதியில் மேய்க்க ஓட்டி சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் தீபா வீடு திரும்பாததால் பதறிய குடும்பத்தினர் ஊர் முழுவதும் தேடி பார்த்துள்ளனர். மேலும் போலீசிலும் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் தீவிர தேடுதலில் ஈடுபட்ட நிலையில், தீபா காட்டுப்பகுதியில் உடலில் இரத்தக்காயங்களுடன், வாயில் துணி அடைத்து, நிர்வாணமாக சடலமாக கிடந்துள்ளார். அதனை கண்ட குடும்பத்தினர்கள் கதறித் துடித்துள்ளனர். பின்னர் போலீசார்கள் தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சந்தேகத்தின் அடிப்படையில், 17 வயதுமிக்க அருண் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது கொல்லிமலை அருகே பொல்லாகாட்டுப்பட்டி குண்டூர் நாடு பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் அண்மையில் தீபா குளிப்பதை மறைந்து நின்று பார்த்துள்ளார். மேலும் அவரை தனது ஆசைக்கு இணங்கும்படியும் வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் கோபமடைந்த தீபா அருணின் கன்னத்தில் அறைந்து, கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து கடந்த 13ம் தேதி, துணிதுவைத்து ஆடு மேய்ப்பதற்காக காட்டுக்குள் சென்ற தீபாவின் பின்னாலேயே அருண் சென்றுள்ளார். பின்னர் அங்கு தீபா தனியாக சிக்கிக்கொண்ட நிலையில், சத்தம் போடமுடியாத அளவிற்கு அவரது வாயில் துணியை அமுக்கி அருண் அருகில் கிடந்த கல்லால் அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அதனை தொடர்ந்து தீபாவை பாலியல் பலாத்காரம் செய்து மீண்டும் அதே கல்லால் கொடூரமாக தாக்கி அருண் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர் தீபாவின் செல்போனையே எடுத்து தனது உறவினருக்கு போன்செய்து நடந்தவற்றைக் கூறிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் அருணை கைது செய்தனர். மேலும் அவர் 17 வயது மிக்க சிறுவன் என்பதால் சிறுவர்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.