மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற 17 வயது சிறுமி... குப்பையில் கிடந்த கிசு... போலீசார் விசாரணை...
சேலம் மாவட்டம் வாழப்பாடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா(17). இவரது தந்தை இறந்த நிலையில் தாய் தனியார் பால் பண்ணை ஒன்றில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது உறவினர் வீட்டு பையன் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரின் மூலம் கர்ப்பமாகி உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சிறுமியை வாழப்பாடி பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பிரசவம் பார்த்த செல்வம்பாள் பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக கூறி சிசுவை குப்பை தொட்டியில் வீசியுள்ளனர். பின் சிறுமியின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வேறு மருத்துவமனைக்கு சென்ற சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனையடுத்து வாழப்பாடி போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று விசாரனை நடத்தியுள்ளனர். அப்போது குப்பையில் கிடந்த பெண் கிசு உயிருக்கு போராடியப்படி உயிருடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கஇசஉவஐ மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமிக்கு பிரசவம் பார்த்த செல்வம்பாள் மருத்துவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியை கர்ப்பமாக்கிய காதலனையும் போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.