மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயது சிறுமி 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; தெரிந்தவர்களை நம்பியதால் நடந்த பயங்கரம்.. தமிழகமே அதிர்ச்சி.!
ஆட்டோவில் அழைத்து சென்று வீட்டில் விடுத்துவதாக தெரிந்த 17 வயது சிறுமியை 3 பேர் கும்பல் கூட்டாக சேர்ந்து கற்பழித்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
தென்காசி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, நேற்று முன்தினம் இரவில் செங்கோட்டைக்கு சென்றுள்ளார். அங்கு செல்போன் கடையில் செல்போனை பழுது பார்க்க கொடுத்துவிட்டு நின்றுள்ளார். அவ்வழியே அச்சமயம் ஆட்டோவில் வந்த 3 இளைஞர்கள் சிறுமிக்கு தெரிந்தவர்கள் ஆவார்கள்.
மூவரும் சிறுமி தனியே நிற்பதை பார்த்து, ஆட்டோவில் தங்களுடன் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். சிறுமியும் அவர்களுடன் வீட்டிற்கு சென்றுவிடலாம் என எண்ணி புறப்பட்டுள்ளார். ஆட்டோ சிறிது தூரம் சென்றதும், அவரின் வாயில் துணியை வைத்து அழுத்தி கடத்தி இருக்கின்றனர்.
சிறுமியை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று 3 பேரும் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அதிகாலையில் சிறுமியை தென்காசிக்குள் வந்து இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் விசாரிக்கையில் உண்மை அம்பலமாகியுள்ளது.
சிறுமியை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி தென்காசி தைக்கா தெரு ஆட்டோ ஓட்டுநர் மாதவன் (வயது 33), அவரின் நண்பர் வெங்கடேஷ், அந்தோணி (வயது 20) ஆகிய 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டதை உறுதி செய்தனர்.
இவர்களின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் அந்தோணி, மாதவனை கைது செய்துள்ளனர். வெங்கடேஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தென்காசியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.