திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அச்சச்சோ மாட்டிக்கிட்டோம்... தாய்க்கு பயந்து 50 அடி உயர மொட்டை மாடியிலிருந்து குதித்த காதலன் உயிரிழப்பு... சேலம் அருகே பரபரப்பு!!
சேலம் கொல்லப்பட்டியில் உள்ள மதிய சட்டக்கல்லூரியில் தருமபுரியை சேர்ந்த சஞ்சய் என்ற மாணவன் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளான். அதே கல்லூரியில் உடன் பயிலும் ஹரினி என்ற பெண்ணை பள்ளியிலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு நாள் சஞ்சய் தனது காதலியை காண காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் மொட்டை மாடியில் சந்தித்து பேசியுள்ளனர். அந்நேரம் மகளை காணாததால் தேடி கொண்டு ஹரிணியின் தாய் மொட்டை மாடிக்கு வந்துள்ளார். இதனை அவதனித்த சஞ்சய் எங்கே காதலியின் தாய் பார்த்தால் மாட்டிக்கொள்வோமே என்று அஞ்சியுள்ளார்.
இதனால் 50 அடி உயரம் என்று கூட பாராமல் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்துள்ளான். அதில் மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.