ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
19 வயசுதான் ஆகுது..! சாக வேண்டிய வயாதாம்மா இது..? தூக்கில் தொங்கிய சுபஸ்ரீ.. என்ன காரணம் தெரியுமா.?
நீட் தேர்வுக்கு தயாராகிவந்த 19 வயது மாணவி ஒருவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 19 வயது மாணவி ஒருவர் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்றுவந்துள்ளார்.
தற்போது கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகிவந்த சுபஸ்ரீ வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
நீட் தேர்வு நெருங்கும் நிலையில் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.