மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸிடம் அத்துமீறிய 2 இளைஞர்கள் கைது.!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது போக்குவரத்தை சரி செய்யும் பணியில் புதுக்கடை காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் ஒரு வழி பாதையில் செல்ல முயன்றனர். உடனடியாக அந்த பெண் போலீஸ் திரும்பி செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த இளைஞர்கள் திரும்பி செல்லாமல் அந்த பெண் போலீசிடம் தகராறு செய்து தவறான எண்ணத்தில் அவரது முதுகில் தட்டி அத்துமீறி உள்ளனர்.
இதனையடுத்து பெண் போலீஸ் கத்தி கூச்சலிட அந்த இளைஞர்கள் இருவரும் பைக்கில் வேகமாக தப்பிச் செல்ல முயன்றனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் விரைந்து வந்து அந்த இரண்டு பேரையும் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.