3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
சென்னையில் அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த பிரபல ஐடி நிறுவனத்திற்கு 200 கோடி அபராதம்!
சென்னையில் இயங்கி வரும் பன்னாட்டு ஐடி நிறுவனங்களில் காக்னிசன்ட். CTD என அழைக்கப்படும் இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சென்னையில் இந்த நிறுவனத்திற்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன.
2014-ம் ஆண்டுச் இந்த நிறுவனம் சென்னையில் 2.7 மில்லியன் சதுர அடியில் கட்டிய அலுவலகத்திற்காக தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவருக்கு 25 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கை விசாரித்து வந்த அமெரிக்கப் பங்குச்சந்தை ஒழுங்குமுறைகள் ஆணையம், வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தின் கீழ் காக்னிசெண்ட் நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டு ₹200 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் லஞ்சம் வழங்கியதில் தொடர்புள்ள காக்னிசெண்ட்டின் இரண்டு மூத்த அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.