மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குளத்தில் மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம்.. 2 சிறுமிகள் பரிதாப பலி..!
குளத்தில் மீன் பிடிக்க சென்றபோது, ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுமிகள் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகாமையில் கந்தமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மகள்கள் 9 வயதான ஹன்சிகா மற்றும் 8 வயதான சுஜி இருவரும் கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது நண்பர்களுடன் அருகாமையில் உள்ள குளத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது மீன் பிடிக்கும் ஆர்வத்தில் இருவரும் குளத்தில் தவறி விழுந்த நிலையில், தண்ணீர் குறைவாக இருந்தபோதும் இருவரும் சேற்றில் சிக்கியதால் நீரில் முழுகி அலறியுள்ளனர்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்க்கையில் சிறுமிகள் இருவரும் சகதியில் சிக்கியிருப்பது தெரியவந்தது.ஆனால், அவர்களை மீட்பதற்குள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிய வர, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமிகளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தற்போது கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் குழந்தைகள் அனைவரையும், பெற்றோர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துயுள்ளனர்.