மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து: 2 பேர் பரிதாப பலி!!.. விருதுநகர் அருகே பரபரப்பு..!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் தீக்காயம் அடைந்த இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அருகேயுள்ள கோட்டைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (36). இவர் அதே பகுதியில் உள்ள கோட்டநத்தம் கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பலர் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ராமேஷுக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்தது.
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் அறையின் உள்ளே பணிபுரிந்து கொண்டிருந்த கட்டநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி (60), டி.சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துபாண்டி (40) ஆகிய 2 இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
தீக்காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விருதுநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.