மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விருதுநகர் அருகே பரபரப்பு.. 2 சகோதரிகள் கூட்டு பலாத்காரம்.!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சகோதரிகள் இருவரும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஊருக்கு அருகில் வேலை செய்யும் பனியன் கம்பெனியில் சம்பளம் வாங்க வந்த அக்கா, தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அருப்புக்கோட்டை அருகே உள்ள சேது ராஜபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சகோதரரிடம் உங்களது மாமா விபத்தில் சிக்கிவிட்டார் என தெரிவித்துள்ளார். இதனால் பதறிப்போன சகோதரிகள் இருவரும் தங்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு விபத்தில் நடந்த இடத்தில் விடும்படி கூறியுள்ளனர்.
இதனையடுத்து சகோதரிகள் இருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்டு ராஜ்குமார் காட்டுப்பகுதி வழியாக சென்றுள்ளார். அப்போது காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த 4 பேர், ராஜ்குமாரை தாக்கியது போல நடித்து சகோதரிகள் இருவரையும் கூட்டு பழக்கம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து சகோதரிகள் இருவரும் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் 17 வயது சிறுவன், ராஜ்குமார் உட்பட 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.