சாலை விபத்தில் பலியான +2 மாணவர்... சாவில் மர்மமா.? உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு... காவல்துறை பேச்சு வார்த்தை.!



2-student-who-died-in-a-road-accident-the-relatives-pro

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே  சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலியானது தொடர்பாக அவனது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள  அன்பில் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  குகன்(17)  மற்றும் சிவக்குமார்(17). இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தனர். இந்நிலையில் சமயபுரம் அருகே உள்ள நரசிம்மங்கலத்தில் நடைபெறும் கபடி போட்டியை பார்ப்பதற்காக மாந்துறை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று இருக்கின்றனர்.

tamilnaduஅப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் அது இரு சக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கிறது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவக்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் காயமடைந்த மற்றொரு மாணவரான குகன் காயங்களுடனே ஏ கபடி போட்டியை பார்க்கச் சென்று இருக்கிறார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

tamilnaduஇதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத  பரிசோதனைக்கு பின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை தகனம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற உறவினர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் மற்றும் காவல்துறை ஆய்வாளர்  பிரபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிவகுமாரை அழைத்துச் சென்ற குகன் மீது சந்தேகம் இருப்பதாக சிவகுமாரின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் எடுத்துச் சென்றது அடையாளம் தெரியாத வாகனம் தான் என்றும் சிவக்குமாரின் மரணத்தில் குகனுக்கு எந்த பங்கும் இல்லை என காவல்துறையினர் விளக்கினர். மேலும் அடையாளம் தெரியாத வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரை விரைவிலேயே கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்துவதாக உறுதியளித்ததை தொடர்ந்து உடலை தகனத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.