திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
22 மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், அரியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.