திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாவ்.. சூப்பர்...! விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். தேர்தல் நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே அறித்திருந்தார். இந்நிலையில் இன்று சேலம் திட்டம்பட்டியில் ரூ.565 கோடியில் நிறைவேற்றப்பட்ட மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதனையடுத்து அங்கு பேசிய முதலமைச்சர், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், அதிமுக அரசின் இந்த 5 ஆண்டு காலத்தில் 2 முறை விவசாயிகளின் பயிக்கடனை ரத்து செய்துள்ளது. மேலும், குறுகிய காலத்தில் விவசாயிகளுக்காக மேட்டூர் - சரபங்கா உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.