திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலிப்பதாக கூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... போக்சோ சட்டத்தில் 24 வயது இளைஞர் கைது.!
பல்லடம் அருகே 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ள காவல்துறை அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது .
பல்லடம் அருகே உள்ள கிராமத்தைச் சார்ந்த 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் காதலிப்பதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் அந்த இளைஞர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தன்னை காதலிப்பதாக கூறிய நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இது தொடர்பாக பெற்றோரிடம் புகார் தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த சம்பவம் குறித்து பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த யுவராஜ் என்ற 24 வயது இளைஞனை கைது செய்தனர்.
யுவராஜ் அதே பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வந்திருக்கிறார் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.