#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னுடன் வா உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்.. நம்பி சென்ற இளைஞருக்கு நிகழ்ந்த கொடூரம்.!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தாண்டரப்பள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(55). இவர் பெங்களூரில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரின் கடைக்கு பக்கத்தில் நவீன்(25) என்ற இளைஞரும் கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நவீனுக்கும், லட்சுமணன் மகளுக்கு காதல் ஏற்ப்பட்டுள்ளது. இதனை அறிந்த லட்சுமணன் நவீனை பல முறை கண்டித்துள்ளார். ஆனால் நவீன் தனது காதலை தொடர்ந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் நவீனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி நவீனிடம் சென்று தனது மகளை ஒசூரில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அனுப்பியுள்ளேன். நாம் இருவரும் அங்கு சென்று, உறவினர்கள் முன்னிலையில் திருமணம் குறித்து பேசி முடிவு செய்வோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நவீனும் நம்பி, லட்சுமணன் கூப்பிட இடத்திற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து இருவரும் மாலையில் மது அருந்தியுள்ளனர். நவீனுக்கு போதை தலைக்கேறிய தருணத்தில் லட்சுமணன் கட்டையை எடுத்து நவீனை சராமரியாக தாக்கி கொலை செய்துள்ளார். மறுநாள் காலை காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார் லட்சுமணன்.