மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரயில் நிலையத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை... குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்த காவல்துறை.!
அரக்கோணம் ரயில் நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் பிராங்கிளின். இவர் கடந்த ஒரு மாத காலமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் இருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார் .
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அரக்கோணம் ரயில் நிலையம் அருகே பிராங்க்ளின் நடந்து சென்ற போது அவரை சுற்றி வளைத்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியது. உயிர் பிழைப்பதற்காக அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய பிராங்க்ளீனை ஓட ஓட விரட்டி கத்தியால் கொடூரமாக குத்தி விட்டு தப்பி சென்றது அந்த கும்பல்.
இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அரக்கோணம் டவுன் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிராங்க்ளினை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், எஸ்பி அறிவுரையின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.