மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத்தை மீறிய உறவு..17 வயது சிறுவனுடன் ஓட்டம் எடுத்த 27 வயது பெண்மணி.. பரிதவிக்கும் குழந்தைகள்..!
ஓசூர் பெரிய மேநகரம் கிராமப் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான எல்லப்பா. இவருக்கு 17 வயதில் மகன் ஒருவன் உள்ளார். இந்த சிறுவனுக்கு அதே பகுதியில் வசித்து வரும் ராமகிருஷ்ணா ரெட்டியின் மனைவி அர்ச்சனாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நட்பானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. மேலும் ஒரு கட்டத்தில் அர்ச்சனாவால் அந்த சிறுவனை விட்டு பிரிந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அர்ச்சனா தனது வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த சிறுவனுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து இருவரும் பெங்களூரில் உள்ள போத்தனகள்ளியில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் அர்ச்சனாவின் கணவர் அவர்கள் இருவரையும் தேடிவந்த நிலையில் அவர்கள் இருக்கும் இடம் அறிந்து அங்கு சென்ற அவர் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து அந்த சிறுவனை பலமாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்தார் அந்த சிறுவன். இதனையடுத்து அந்த சிறுவனை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.