மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருநங்கையுடன் தகாத உறவு தற்கொலையில் முடிந்த சோகம்!!
சந்தான ராஜ் என்னும் விருதுநகரை சேர்ந்த நபரின் மகன் 28 வயதுடைய ஸ்ரீநாத். இவர் மங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சத்யா நகர் என்னும் பகுதியில் பேக்கரி ஒன்றை அமைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீநாத்துக்கும் காந்தி சாலையில் வசிக்கும் திருநங்கை ஒருவருக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று அந்த திருநங்கையின் வீட்டிற்கு ஸ்ரீநாத் சென்றதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் திருநங்கை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் திருநங்கை வெளியே சென்ற சிறிது நேரத்தில் ஸ்ரீநாத் வீட்டில் தூக்கமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து ஸ்ரீநாத்தின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.