#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தூத்துக்குடி அருகே பெரும் சோகம்.. 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலி!
தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தில் உள்ள குளத்தில் உறவினர்களுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றதால், இதனால் அவர்கள் நீந்த முடியாமல் தத்தளித்துள்ளனர்.
இதனையடுத்து குழந்தைகள் மூவரும் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 3 குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.