#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெரும் சோகம்... நாகப்பாம்பு கடித்து 3 மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு... கதறும் குடும்பத்தினர்!!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் - செல்வி தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் நிறைவு அடைந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு பிரனீஷ் என பெயர் வைத்துள்ளனர்.
செல்வி தனது தாய் வீட்டில் வழக்கம்போல் குழந்தையுடன் படுத்து உறங்கி விட்டு காலையில் விடிந்ததும் வெளியே சென்று வேலை செய்து கொண்டுள்ளார். அப்போது திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே செல்வி உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை நாகப் பாம்பு ஒன்று கடித்து விட்டு படம் எடுத்து நின்றுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வி உடனே கத்தி கூச்சல் ஈட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாகப் பாம்பை துரத்திவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து வேலூர் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு செல்வி கதறி கூச்சலிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.