திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
300 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்,,, சிந்தாதரிப்பேட்டையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி..!
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் இருந்து 300 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன்களின் தரம் குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை, மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் உத்தரவின் பெயரில் என் ராஜா தலைமையிலான அதிகாரிகள் குழு, மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் மாப்பிள்ளை துறை தலைமையிலான அதிகாரிகள் இன்று சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அழுகிய கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சரியான விதிமுறைகளை பயன்படுத்தி பதப்படுத்தாத மீன்களும் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று 300 கிலோ அழுகிய கெட்டுப்போன மீன்கள் வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் மீது பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்குக்கு எடுத்துச்செல்லப்பட்டு அழிக்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் உறைவிக்கப்பட்ட மீன்கள் 18 டிகிரி செல்சியஸ் அளவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் மார்க்கெட்டில் அவ்வாறு இல்லை. மேலும் அழகிய மீன்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இது தவறான போக்கு, இதுகுறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த இருக்கின்றோம் என்று கூறினார்.
மேலும் சிந்தாதிரிப்பேட்டை போல நகரில் உள்ள மற்ற மீன் மார்க்கெட்களிலும் இதுபோல தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என்றும், விதிமுறை மீறல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மீன் மார்க்கெட்டுகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.