மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
304 அரசு பள்ளி மாணவர்கள்; செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண தமிழக அரசால் தேர்வு...!
செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 304 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளில், வட்டம், மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே செஸ் போட்டிகளை நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்க்கவும், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதன் தொடக்கமாக பள்ளி அளவில் நடத்தப்படும் செஸ் போட்டிகளை தென்காசியில் உள்ள இ.சி.ஈ. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்.
இந்த போட்டிகள் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடக்கும். இதில் வெற்றி பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஒரு மாவட்டத்துக்கு எட்டு பேர் என்ற முறையில் 38 மாவட்டங்களில் இருந்து 152 மாணவர்கள், 152 மாணவிகள் என மொத்தம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 304 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த மாணவர்கள் சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை காண சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்.
இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ, மணவிகளின் நுண்ணறிவு, செயல்பாடு மற்றும் ஆளுமைத் திறன்களை செஸ் போட்டிகளின் மூலம் வெளிக்கொண்டு வரும் விதமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.