ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
17 வயது பையனுடன் ஓட்டம் பிடித்த 33 வயது பெண்... விருதுநகர் அருகே பரபரப்பு!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (33). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மகாலட்சுமி அவரது பகுதிக்கு அருகே உள்ள தனியார் செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அதே செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுவன் ஒருவருடன் மகாலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் திடீரென செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற மகாலட்சுமி வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமியின் கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் மகாலட்சுமி வேலை பார்த்து வந்த செங்கல் சூளைக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான் அங்கு வேலை பார்த்து வந்த 17 வயது சிறுவனும் மாயமானது தெரியவந்துள்ளது. பின்னர் தீவிர விசாரணை நடத்தியதில் 17 வயது சிறுவனுடன் மகாலட்சுமி ஓடி கன்னியாகுமரியில் இருப்பது தெரியவந்துள்ளது.
அதனையடுத்து கன்னியாகுமரி விரைந்த போலீசார் மகாலட்சுமியை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.