3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
10-ம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் தோல்வி.! அசாமில் 34 பள்ளிகளை மூட முடிவு
அசாம் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியானதில் தேர்ச்சி சதவீதம் 56.49 சதவீதம் என்று தெரியவந்தது. அதிலும் 34 பள்ளிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது மாநில அம்மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் 34 பள்ளிகளில் படித்த 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அசாம் கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு கூறுகையில், பூஜ்ய தேர்ச்சி விகிதம் கொண்ட இந்த பள்ளிகளுக்கு மக்களின் வரிப்பணம் செலவிடுவது என்பது அர்த்தமற்றது.
மேலும், மிக குறைவான எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பல பள்ளிகளும் இங்கு உள்ளன. ஒரு சில பள்ளிகளில் 2 முதல் 3 மாணவர்களே உள்ளனர். பள்ளி கூடங்களின் முதன்மை பணியே, கல்வியில் பங்காற்றுவது ஆகும். ஆனால், ஒரு பள்ளியின் பொதுத்தேர்வில் தேர்ச்சி முடிவு பூஜ்யம் என்றால், பின்னர் அந்த பள்ளி இல்லாமல் இருப்பதே நல்லது. எனவே, அந்த பள்ளிகளை பிற பள்ளிகளுடன் இணைக்க கூடிய முயற்சிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.