#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜாக்கிரதை!! வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியை கொன்று நகையை பறித்த தம்பதியினர்... போலீசார் விசாரணை!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் சரளாதேவி. கணவரை இழந்த இவர் தனது மகன், மருமகள் மற்றும் பேர குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் அனைவரும் வீட்டின் மாடியில் வசித்து வரும் நிலையில் கீழ் பகுதியில் உள்ள வீடு வாடகைக்கு விட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கீழ் பகுதியில் உள்ள வீடு காலியாக இருந்ததால் வாடகைக்கு விடப்படும் என பலகை மட்டி உள்ளனர். இதனை பார்த்து தம்பதியினர் ஒருவர் வீடு வாடகைக்கு தேவைப்படுவதாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பார்த்து விட்டு திங்கட்கிழமை வருவதாக கூறி சென்றுள்ளனர். அதேபோல் வீடு பார்க்க வந்துள்ளனர். ஆனால் அந்த சமயம் சரளாவின் மகன் தனது கடைக்கு சென்ற நிலையில் மருமகளும் கணவருக்கு மத்திய சாப்பாடு எடுத்து சென்றுள்ளார்.
மூதாட்டி சரளாதேவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த தம்பதி மூதாட்டியின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளது.அதில் மூதாட்டி மயங்கி கீழே விழுந்தது அவரின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர். அந்த சமயம் சரளாவின் மகள் போன் செய்துள்ளார். வெகு நேரம் ஆகியும் தாய் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் தனது தம்பிக்கு போன் செய்து வீட்டிற்கு உடனே செல்லுமாறு கூறியுள்ளார்.
அங்கு சென்று பார்த்த போது சரளா மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து சரளாவின் மகன் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் வீடு வாடகைக்கு பார்ப்பது போல் நடித்து மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.