மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போலீஸ் நிலைய வாசலில் குத்தாட்டம் போட்ட பெண்.. கண்டுகொள்ளாத போலீஸ்.. இதுதான் காரணமா.!
சேலம் மாவட்டம் எடப்பாடி போலீஸ் நிலையத்திற்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது ஏற்கனவே புகார் அளிக்க வந்தவர்களிடம் போலிசார் விசாரனை நடத்தி வந்ததை அடுத்து அந்த பெண்ணை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.
இதனால் பொறுமை இழந்த அந்த பெண் திடீரென போலீஸ் நிலைய வாசலில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வாசலின் முன்பு தொடர்ந்து 2 மணி நேரம் திரைப்படத்தில் வரும் பல்வேறு பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
இதனை அவதனித்த சிலர் அந்த பெண்ணிடம் சென்று, இது போலீஸ் நிலையம், இங்கு நடனம் ஆட கூடாது என அறிவுறுத்தினர்.அதற்கு அந்த பெண் ஆட்டம் புடிச்ச ஒரு ஓரமா நின்னு பாரு இல்லையென்றால் போய்க்கொண்டே இரு என அவர்களிடம் தெரிவித்தார். பின் அந்த பெண்னை அங்கிருந்த போலீசார் யாரும் ஏன் என்று கேட்காத நிலையில் ஆடிக்களைத்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து போலிசாரிடம் கேட்ட போது, அந்தப் பெண் எடப்பாடி நகராட்சி உட்பட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்றும், அடிக்கடி பிரச்சனை என கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வருவதாகவும், அவரது பொய்யான புகாரை ஏற்காத பட்சத்தில் இவ்வாறு குத்தாட்டம் போட்டு போலீஸ் நிலைய வாசலில் பரபரப்பு ஏற்படுத்துவதாகவும் கூறினர்.