மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 4 இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை.!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அரியபட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்களான சிவக்குமார், பொன்னுசாமி, செல்வகுமார், செல்வம், சிவா இவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பெட்ரோல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் சிவகங்கை உள்ள மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் பொன்னுசாமி, சிவக்குமார், செல்வகுமார், செந்தில்குமார் ஆகிய 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 54,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் சிவா மற்றும் செல்வம் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.