மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படியில் பயணம் நொடியில் மரணம்.. 4 கல்லூரி மாணவர்கள் பலி!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் ஸ்ரீ மாலோலான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் படித்து வருகின்றனர். இதில் கல்லூரிக்கு மாணவர்கள் தனியார் பேருந்தில் சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று கல்லூரி மாணவர்கள் வழக்கம் போல் தனியார் பிரிந்தின் படிக்கட்டில் நின்றவாறு பயணித்துள்ளனர். அப்போது தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற கண்டெய்னர் லாரி பேருந்து மீது மோதியதில் படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்கள் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மன்னர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் உயிரிழந்த மாணவர்கள் மோனிஷ், கமலேஷ், தனுஷ் மற்றும் ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், 5 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சில மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.