மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: அரையாண்டு தேர்வுகள் 4 மாவட்டங்களுக்கு மட்டும் ஒத்திவைப்பு: அரசு அறிவிப்பு.!
தமிழகத்தில் டிசம்பர் 07ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு முடிந்ததும் அரையாண்டு தேர்வுகள் விடுமுறை ஜனவரி மாதம் 01ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாங் புயலாக வலுப்பெற்று ஆந்திராவில் கரையை கடந்தது. புயலின் மழை பொழியும் மேகங்கள் காரணமாக, தலைநகர் சென்னை கடுமையான மழையை சந்தித்தது.
இதனால் வெள்ளத்தின் பிடியில் நகரம் சிக்கி, 2 நாட்கள் தொடர் விடுமுறை 4 மாவட்டங்களுக்கு விடப்பட்டது. நாளை படிப்படியாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகள் திறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து உள்ள பிற மாவட்டங்களில் திட்டமிட்டபடி 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கூறிய 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பானது முற்றிலும் சரியானதும் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.