மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கார் மீது மோதிய அரசு பேருந்து.! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி.! துயர நிகழ்வு!!
மன்னார்குடியை சேர்ந்த மதிவாணன் என்பவர் இன்று காலை மனைவி கௌசல்யா, மகள் சாரா, மாமியார் தவமணி, மாமனார் துரை ஆகியோருடன் சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு காரில் சென்று கொண்டு இருந்துள்ளார். கார் உளுந்தூர்பேட்டை ஆவட்டி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் திருச்சியை நோக்கி அரசு பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது.
இந்நிலையில் பனிமூட்டம் காரணமாக முன் சென்ற காரை கவனிக்காமல் பேருந்து ஓட்டுனர் காரின் பின்பகுதியில் மோதியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக சென்று மரத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. மேலும் இதில் காரில் சென்ற மதிவாணன் அவரது மனைவி கௌசல்யா, மகள் சாரா, தவமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கௌசல்யாவின் தந்தை துரை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.