மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பூங்காவில் 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றிய 4 போலீசார்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவிரி கரையில் அமைந்துள்ள முக்கொம்பு பூங்காவிற்கு திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த புதன்கிழமை மாலை 17 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் பூங்காவிற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு மதுபோதையில் இருந்த 4 போலீசார் அந்த ஜோடியை அழைத்து விசாரித்துள்ளனர். அதில் சசிகுமார் என்ற போலீஸ் சிறுமியின் ஆண் நண்பரை பார்த்து நீ என்ன கஞ்சா விற்பனை செய்பவன் போல் இருக்கிறாய் என விசாரணைக்கு அழைத்துள்ளார். அதற்கு அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமான போலீசார் சிறுமியை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர்.
இதனால் பதறி போன சிறுமியின் ஆண் நண்பர் அவசர எண்ணாண 100 க்கு கால் செய்து நடந்தவற்றை பற்றி கூறியுள்ளார். உடனே போலீசார் விரைந்து சென்று கரூரில் சுற்றி திரிந்த அந்த 4 போதை போலீசாரிடமிருந்து சிறுமியை மீட்டுள்ளனர். ஜீப்பில் சென்ற போது போதை போலீசார் 4 பேரும் தன்னிடம் அத்துமீறியதாக சிறுமி புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 4 பேரின் மீதும் போக்கோ உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.