மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் பலி.!
சென்னையில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த தம்பதியினர் அய்யனார் - சோனியா. இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ரக்சன் என்ற மகன் இருந்துள்ளான்.
இந்த நிலையில் சிறுவன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளான். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் ரக்சன் பரிதாபமாக உயிரிழந்துள்ளன். டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.