மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மூக்கு, வாயிலிருந்து தாய்ப்பால் வெளியேறி பிறந்த குழந்தை பரிதாப மரணம்.!! தாய்மார்களே கவனமா இருங்க..!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள வெண்டிபாளையம் சீனிவாசராவ் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 30). இவரின் மனைவி ராஜேஸ்வரி (வயது 25). தம்பதிகள் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு வயதுடைய பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் மீண்டும் கர்ப்பமான ராஜேஸ்வரி கடந்த 21-ஆம் தேதி அதிகாலையில் வீட்டிலேயே குழந்தையை பெற்றுள்ளார். இதன்பின்னர் ராஜேஸ்வரிக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் உடனடியாக இருவரையும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின் கடந்த 24-ஆம் தேதி அவர் வீட்டுக்கு வந்த நிலையில், சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
அப்போது குழந்தையின் மூக்கு மற்றும் வாயிலிருந்து தாய்ப்பால் வெளியேறி இருக்கிறது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்ததை உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தை பால் குடித்து விட்டதா?, சரியான நிலையில் வைத்து பால் ஊட்டினோமா? என்பதை சரிபார்க்க வேண்டும். சில சமயம் புரை ஏறுவதும் உண்டு. அதனால் கவனமாக இருப்பது நல்லது.