மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி விபத்து... 5 வயது சிறுவன் பரிதாப பலி..!
சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி இரு சக்கர வாகன விபத்துக்குள்ளாகியதில், 5 வயது சிறுவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
சென்னை திருவொற்றியூர், சரஸ்வதி நகர் 12-வது தெருவில் வசித்து வருபவர் அர்ஜுன். இவர் ஸ்விக்கியில் டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று ஸ்விக்கி டெலிவரி செய்வதற்காக அவரது 5 வயது மகனுடன் மணலி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் வேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் சிறுவன் புகழ்குமார் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து உயிரிழந்துள்ளார். பின் இந்தவிபத்து காவல்துறையினருக்கு சக வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.