சிறுவனின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!



5-years-old-boy-swallowed-iron-nail-in-ossur

பொதுவாக குழந்தைகள் என்றாலே விளையாடும்போது கையில் கிடைக்கும் சிறு சிறு பொருட்களை விழுங்கிவிடுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் ஓசூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் கல் உடைக்கும் தொழிலாளியான வெங்கட்ராம் என்பவரின் ஐந்து வயது மகன் விஸ்வநாத் விளையாடும்போது அருகில் இருந்த ஆணியை எடுத்து விழுங்கியுள்ளான்.

ஆணி சிறுவனின் வயிற்றுக்குள் சிக்கி கொண்டதால் சிறுவன் வலியால் துடித்துள்ளான். உடனே சிறுவனின் பெற்றோர் சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போராடி பார்த்த மருத்துவர்கள், உடனடியாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.

tamil news

சிறுவன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை நடைபெற்று வருகிறது. ஆணி எந்த இடத்தில் உள்ளது என ஸ்கேன் செய்த மருத்துவர்கள் ஆணி எக்குத்தப்பாக சிக்கியுள்ளதால் மருத்துவர்களே எப்படி எடுப்பது என தெரியாமல் அதிர்ந்து போயுள்ளனர்.