திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 52 வயது முதியவர் கைது.!
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதி சேர்ந்தவர் 52 வயதான சக்தி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதன்படி, 8 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் சக்திக்கு தலா 7 ஆண்டுகள் விதம் 21 ஆண்டுகள் சிறைதண்டனையும், 4500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.