ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பழம் வாங்க சென்ற 55 வயது நபர் சடலமாக மீட்பு... மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்.?
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 55 வயது நபர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் ஐயம்பெருமாள்(55). இவரது மனைவி வனஜா. இவர் சைக்கிளில் பழச்சாறு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 4-ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பழம் வாங்குவதற்காக சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் ஐந்தாம் தேதி திருவொற்றியூர் எம்ஜிஆர் சாலையில் உள்ள குடோன் அருகே சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார் ஐயம்பெருமாள். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஐயம்பெருமாளின் மனைவி வனஜா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரது இறப்பு தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.