மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி..!
பல்லடத்தை அடுத்த பனப்பாளையம் என்னும் பகுதியில் வசித்து வருபவர் நாகரத்தினம். இவரது மனைவி ராஜேஸ்வரி 58 வயது ஆகிறது. இதனால் சம்பவத்தன்று இரவு நேரத்தில் கோவையிலிருந்து, திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையை கடப்பதற்காக முயன்றுள்ளார்.
அப்பொழுது வாகனம் ஒன்று அதீத வேகத்தில் வந்து ராஜேஸ்வரி மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து ராஜேஸ்வரி மகன் நிஷாந்த் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் தன் தாய் மரணம் அடைந்துள்ளார் என்று புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.