காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
5G சிம் அப்டேட் OTP கேட்கிறார்களா?.. உஷார் மக்களே.. மொத்த பணமும் அபேஸ்.. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்..!
நெட்ஒர்க் அப்டேட் என்று கூறி மர்ம நபர்கள் OTP கேட்டால், அதனை கொடுக்க வேண்டாம் என தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள்ளனர்.
சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை தடுக்க பல முயற்சிகள் நடந்தாலும் அது பலனின்றி போகிறது. இந்த நிலையில், இந்தியாவில் நெட்வொர்க் சேவையானது 4G-ல் இருந்து 5G-யாக தரம் உயர்த்தப்பட்டு, பயனர்களுக்கு அச்சேவையை வழங்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
4G சிம்-மில் இருந்து 5G-க்கு மாற்றம் செய்து தருவதாக கூறி முறைகேடுகள் நடப்பதாகவும் தொலைதொடர்ப அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்துள்ளது. மர்ம நபர்கள் தங்களின் சிம்மை 5G-க்கு அப்டேட் செய்து தருகிறோம் என்றும், உங்களின் செல்போன் எண்ணுக்கு ஒரு OTP வந்துள்ளதை கூறுங்கள் என்றும் தெரிவித்தால், அதனை தெரிவிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
அவ்வாறு மர்ம நபரின் அழைப்பை துண்டிக்காமல் OTP நம்பரை வழங்கினால் நமது வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடப்படும் என்றும் எச்சரித்து இருக்கின்றனர். மேலும், எந்த ஒரு நெட்வொர்க் நிறுவனமும் இது தொடர்பாக OTP கேட்காது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.