திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீடு புகுந்து மூதாட்டியின் 6 சவரன் நகை கொள்ளை.. 2 இளைஞர்களை மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அப்துல் கலாம் நகரில் சாரதா பாய்(70) வசித்து வந்துள்ளார். இவரது கணவர் தேவனேசன் உடல்நல குறைவால் சில வருடங்களுக்கு முன் இறந்து போன நிலையில் சாரதா பாய் அங்கு தனியாக வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சாரதா பாய் மாடுகளை வளர்த்து பால் விற்று வருமானம் ஈட்டி வந்துள்ளார். இதனால் அவ்வப்போது ஊரில் சிலர் சாரதா பாய் வீட்டிற்கு வந்து பால் வாங்கி செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று 2 இளைஞர்கள் மூதாட்டியின் வீட்டிற்கு வந்து பால் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதனையடுத்து சாரதா பாய் உள்ளே சென்று பால் எடுத்து வருவதற்குள் ஒரு இளைஞர் வீட்டின் உள்ளே வந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 சவரன் நகையை பறித்து விட்டு வெளியில் இரு சக்கர வாகனத்தில் காத்துக் கொண்டிருந்த மற்றொரு இளைஞருடன் தப்பி சென்றுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சாரதா பாய் சத்தம் போட்டுள்ளார். பின்னர் அவரது அலரல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தப்பி சென்ற இளைஞர்களை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஓசூர் காவல் நிலையத்தில் மூதாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது முனீஸ்வா் நகா் பகுதியை சேர்ந்த யெஷ்வந்த் மற்றும் அலெக்ஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த இரண்டு இளைஞர்களையும் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மூதாட்டியின் 6 சவரன் நகையை பறிமுதல் செய்து சாரதா பாயிடம் ஒப்படைத்தனர். மேலும் மூதாட்டியின் நகை கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.