#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னை: தீபாவளிக்கு உங்கள் ஊருக்கு செல்லும் பேருந்து எந்த இடத்தில் இருந்து புறப்படுகிறது!
வெளி மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கியிருக்கும் அனைவரும் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து கழகம் பேருந்துகளை சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க முடிவு செய்துள்ளது.
இதில் எந்த ஊருக்கு எந்த இடத்தில் இருந்து பேருந்து புறப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்:
மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம் ,தஞ்சை மற்றும் அதை தாண்டிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.
கோயம்பேட்டில் இருந்து திருச்சி வேளாங்கண்ணி, மதுரை நெல்லை, செங்கோட்டை, பண்ருட்டி ,விழுப்புரம் , சேலம், கோவை, பெங்களூரு, எர்ணாகுளத்திற்கு இயக்கப்படுகிறது.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் ஆரணி, ஆற்காடு வேலூர், தருமபுரி ,ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.
கே.கே.நகர் பணி மனையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.