மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சாக்லேட் வாங்கி தரேன் தாத்தா சொல்றத செய்.." 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.!! முதியவர் மீது போக்சோ வழக்கு.!!
ஆத்தூர் அருகே பரோட்டா மற்றும் சாக்லேட்டுகள் வாங்கித் தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இரவு நேர காவலாளி
ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம், காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில் இரவு நேர காவலாளியாக வீராசாமி என்று 63 வயது நபர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு சாக்லேட் மற்றும் பரோட்டா வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றிருக்கிறார்.
சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை
மேலும் சிறுமி அப்பகுதியில் விளையாடும் போது அவரை தனியாக அழைத்துச் சென்று ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும் இதனை வெளியே கூறினால் கொன்று விடுவேன் எனவும் முதியவர் சிறுமியை மிரட்டி இருக்கிறார். இதனால் அச்சமடைந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: திருமண வீட்டில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை; இளைஞர் போக்ஸோவில் கைது.. விழுப்புரத்தில் பேரதிர்ச்சி.!
போக்சோ சட்டத்தில் கைது
இதனைத் தொடர்ந்து முதியவர் மீது கொடுக்கப்பட்ட புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அது தொடர்பாக தீவிர விசாரணை செய்து முதியவர் வீரா சாமியை கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மானாமதுரை: ஆண் நண்பருடன் இருந்த பெண் ஐவர் கும்பலால் கற்பழிப்பு; 2 காமுகன்களுக்கு மாவுக்கட்டு.!