மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆடையின்றி சடலமாக கிடந்த 65 வயது மூதாட்டி.. 72 வயது முதியவர் செய்த கொடூர சம்பவம்!
தென்காசி அருகே 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே நிகழ்கிறது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவ 65 வயதான மூதாட்டி முப்புடாதி கணவனை இழந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகன் திருமணமாகி பக்கத்து கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மூதாட்டி உடலில் ஆடை இன்றி மாட்டு சாணம் கொட்டும் பள்ளத்தில் முகம் புதைந்து சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த 72 வயதான ராமர் என்ற முதியவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது செய்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து ராமர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.