பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கிடந்த 7 மாத கர்ப்பிணி பெண்.! காதல் கணவரே அடித்துக் கொன்றதாக புகார்..!



7-month-praganent-lady-suside

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் - பூங்கொடி தம்பதியினர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். 

இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான பூங்கொடி,க்கும் அஜித்துக்கும்  இடையே அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டு வந்துள்ளது. ஒரு நாள் பூங்கொடி தனது கணவருடன் சண்டையிட்டு கொண்டு உறவினர் வீடான சுமதி என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். 

suside

அங்கு வந்த பூங்கொடியின் கணவர் பூங்கொடி அடித்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதனை அடுத்து பூங்கொடி பூட்டிய தனி அறையில் உடல் முழுவதும் காயங்களுடன் தூக்கில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

அதனை அடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்கும் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பூங்கொடியின் உறவினரான சுமதி பூங்கொடியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அஜித் மீது புகார் கொடுத்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.