திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் கருகளைப்பு மாத்திரை சாப்பிட்ட 7மாத கர்ப்பிணி.. தாய் சிசு இருவரும் இறந்த சோகம்.!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தில் கூலி வேலை செய்து வருபவர் வீரமணி. இவர் தனது மனைவி ரமணா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் தாரணி என்ற மகளும், 2 வயதில் ஹரிபிரசாத் என்ற மகனும் உள்ள நிலையில் இப்போது ரமணா 7 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதால் 3வது குழந்தை வேண்டாம் என்று நினைத்த ரமணா கர்ப்பத்தை கலைக்க மருத்துவர்களை ஆலோசிக்காமல் மருந்துக் கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனால் ரமணாவிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதைபார்த்த வீரமணி மற்றும் அவரது உறவினர்கள் பதறிப்போய் உடனே அவரை அரியலூர் மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர்.
இதனையடுத்து அங்கு ரமணாவை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் பெண் சிசு இறந்த நிலையில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யபட்டு ரமணா வயிற்றில் இருந்த குழந்தை அகற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து ரமணாவுக்கு தொடர்ந்து ரத்த போக்கு அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரமணா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கருக்களைப்பு மாத்திரை உட்கொண்டு 7 மாத கர்ப்பிணி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.