மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாக்கிங் போனது ஒரு குத்தமா.? அதிகாலையில் காத்திருந்த அதிர்ச்சி..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள குரங்கு சாவடி என்னும் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி அனிதா இவருக்கு 37 வயதாகிறது. பிரகாசத்தின் மனைவி அனிதா, தினமும் அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதை பழக்கமாக வைத்துள்ளார். எனவே, அவர் வழக்கம் போல் நடைப்பயிற்சி செய்வதற்காக குரங்கு சாவடியில் உள்ள விநாயகர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.
அச்சமயத்தில், ஏற்கனவே இரண்டு பேர் இவர் தினசரி நடை பயிற்சி மேற்கொள்வதை நோட்டமிட்டு வந்துள்ளனர். நகை பறிப்பதற்கு தக்க நேரம் பார்த்துக் காத்து கொண்டிருந்தவர்கள் அனிதாவின் பின்னே இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளனர். அங்கு என்ன நடக்க போகும் என்பதை அறியாத அனிதா எப்பொழுதும் போல் நடைபெற்ற மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பைக்கில் வந்த இரண்டு பேர் நொடியில் அனிதாவின் கழுத்தில் இருந்த ஏழு சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளன.
இதனை சற்றும் எதிர்பாராத அனிதா என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய அவர் நடந்த சம்பவத்தை கூறி அழுது புலம்பியுள்ளார். மேலும் இது குறித்து காவல் துறையில் முறையிட்டு தனது நகையை மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியிலும், பீதியிலும் உள்ளனர்.