மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோர்கள் போட்ட சண்டையால் 7 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தண்டலம் என்னும் ஊரில் 7 வயது சிறுவன் பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர்கள் சம்பவ தினத்தன்று சண்டை போட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இதனால் 7 வயது சிறுவன் பயத்தில் வீட்டிற்குள் ஓடி உள்ளான். அப்போது அங்கு அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளான்.
இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தண்டலத்தை சேர்ந்தவர்கள் துளசி மற்றும் கஸ்தூரி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் துளசி நள்ளிரவு சமயத்தில் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் வாக்குவாதம் பெரிதாகி கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள்.
இதனால் பயத்தில் சிறுவன் வீட்டிற்குள் ஓடிய போது எதிர்பாராத விதமாக இச்சம்பவம் நடந்துள்ளது.