மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடிய விடிய உயிருக்காக போராடிய தாய்.. சற்றும் கலங்காத மகன்களால் ஏற்ப்பட்ட சோகம்..!
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாகூர் பகுதியை சேர்ந்தவர் அருமைக்கண்ணு(70). இவருக்கு ராகவன், வீரமணி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அருமைக்கண்ணு தினமும் கூலி வேலைக்கு சென்று அதில் வரும் சம்பளத்தை வைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல முதுமையின் காரணமாக அருமைக்கண்ணு தனது மூத்த மகன் ராகவன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் அங்கு அருமைக்கண்ணுக்கு சரியாக சாப்பாடு வழங்கப்படாததால் இரண்டாவது மகன் வீரமணியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கும் அவருக்கு சரியான சாப்பாடு கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அருமைக்கண்ணு அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை அடுத்து ஆம்புலன்ஸ் வீட்டிற்கு வரவே அருமைக்கண்ணுவின் இரண்டு மகன்களும் ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்கு வர மறுத்துள்ளனர்.
அதனால் ஆம்புலன்ஸ் திரும்பி சென்றுள்ளது. அதனை தொடர்ந்து தகவல் அறிந்த வந்த போலீசார் அருமைக்கண்ணுவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கோரி அவரின் மகன்களுக்கு வலியுறுத்தியுள்ளனர். அதனை அடுத்து வீரமணி தனது தாயை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு செல்லாமல் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அருமைக்கண்ணு விடிய விடிய உயிருக்கு போராடி அதிகாலை உயிரிழந்துள்ளார்.